20 கோடி கல்லா கட்டிய புத்தக கண்காட்சி..
சென்னை புத்தக கண்காட்சிக்கு 13 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர் என பபாசி தெரிவித்துள்ளது.
சென்னை புத்தக கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 9 முதல் 21 வரை நடைபெற்று வருகிறது. இதன் படி இன்று புத்தக கண்காட்சிக்கு கடைசி நாள்.
இந்நிலையில் புத்தக கண்காட்சிக்கு மொத்தம் 13 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் இந்தாண்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளீயீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.