வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2024 (09:24 IST)

தமிழகத்தில் மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில்கள்! நேரம், நிறுத்தங்கள் முழு விவரங்கள்!

vande bharath

தமிழ்நாட்டில் இந்திய ரயில்வேயின் புதிய அறிமுகமான வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே 5 செயல்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் 2 ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

 

இந்திய ரயில்வேயின் புதிய ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள் இந்தியா முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை செண்ட்ரல் - கோவை, விஜயவாடா, மைசூர் ஆகிய வழித்தடங்களிலும் எழும்பூர் - நெல்லை, கோவை - பெங்களூர் வழித்தடங்களிலும் என 5 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் புதிதாக எழும்பூர் - நாகர்கோவில், மதுரை - பெங்களூர் இடையே புதிதாக இரண்டு வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. எழும்பூர் - நாகர்கோவில் (20627 - 20628) இடையேயான ரயில் சேவை எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணியளவில் நாகர்கோவிலை சென்றடையும். மறுமார்க்கமாக மதியம் 2.20க்கு நாகர்கோவிலில் புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இடையே தாம்பரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய 7 நிறுத்தங்களில் நின்று செல்லும். வாரத்தின் புதன்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இந்த ரயில் செயல்படும்.
 

 

மதுரை - பெங்களூர் (20671 - 20672) இடையேயான ரயில் சேவை மதுரையில் காலை 5.15க்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூர் செல்லும். மறுமார்க்கமாக பெங்களூரில் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு மதுரை வந்தடையும். இடையே திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய 6 நிறுத்தங்களில் நின்று செல்லும். வாரத்தின் செவ்வாய்க்கிழமை தவிர்த்த 6 நாட்களில் இந்த ரயில் சேவை செயல்படும்.

 

இந்த புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி ஆகஸ்டு 31ம் தேதியன்று காணொலி மூலமாக தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K