வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 25 ஏப்ரல் 2020 (15:04 IST)

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாதம் பணி நீட்டிப்பு – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள் தம் உயிரைப் பணயம் வைத்துப் போராடி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில்,அவர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் கொரொனாவுக்கு எதிராக மருத்துவர்கள் செவிலியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். எனவே, இம்மாத்த்துடன்  பணி ஓய்வு பெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களின் பணியை நீட்டிப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்த முறையில் 2 மாதத்திற்கு பணியாற்ற நியமன ஆணைகள வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.