திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 4 ஜனவரி 2019 (09:01 IST)

ஒரே நாளில் 14 ரவுடிகள் கைது! நெல்லையில் பரபரப்பு

நெல்லையில் குற்றச்செயல்கள் அதிகம் நடப்பதாக கடந்த சில மாதங்களாக புகார்கள் குவிந்த நிலையில் இன்று காலை நகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்திய காவல்துறையினர் இன்று ஒரே நாளில் 14 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ரவுடிகளில் இருந்து ஆபத்தான் 9 நாட்டு வெடிகுண்டுகளும், 27 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 14 ரவுடிகளில் கொலை வழக்கில் தேடப்பட்ட கண்ணபிரான், குமளி ராஜ்குமார் உள்ளிட்டோர் அடங்குவார்கள் என்றும், நெல்லை நகரின் அமைதிக்காக இதேபோன்ற கைது நடவடிக்கை தொடர்ந்து இருக்கும் என்றும் நெல்லை போலீசார் தெரிவித்துள்ளனர்.

நெல்லையில் இன்று ஒரே நாளில் 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் இனி குற்றச்செயல்கள் குறையும் என்றும், இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது