1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (18:48 IST)

மிஸ்டு கால் காதல்; மிஸ் ஆன இளம்பெண்: அதிர்ச்சி பின்னணி

நெல்லை அருகே உள்ள பேட்டையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கம்ப்யூட்டர் செண்டரில் படித்து வந்துள்ளார். சில தினகங்களுக்கு முன்னர் காணாமல் போன இந்த பெண் பிணமாக மீக்கப்பட்டுள்ளார். 
 
இது குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இளம்பெண்ணுக்கு மிஸ்டு கால் மூலமாக அறிமுகமாகியுள்ளார் ஒரு ஜேசிபி டிரைவர். இந்த அறிமுகம் பேஸ்புக், வாட்ஸ் ஆப் என வளர்ந்துள்ளது. 
 
குறிப்பாக இந்த 6 மாத காலத்தில் இருவம் நேரில் சந்தித்தும் பழகி காதலை வளர்த்து வந்துள்ளனர். ஆனால், அந்த பெண்ணின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வேறு ஒரு திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதற்கு அந்த பெண்ணும் சம்மதித்துள்ளார். 
 
இதைபற்றி தெரியவந்ததும் கோபமடைந்த ஜேசிபி டிரைவர், நாம் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என கூறி அந்த இளம் பெண்ணை அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொன்றுள்ளான். 
 
ஆனால், இப்போது இதில் சந்தேகம் என்னெவெனில் அந்த பெண் பிணமாக மீடகபப்ட்ட போது கை கட்டப்பட்டு இருந்துள்ளனர். எனவே, அந்த பெண்ணின் காதலனுக்கு மட்டும் இந்த கொலையில் சம்மந்தம் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் விஷ்யம் உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.