1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சென்னை , செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (13:49 IST)

100 பெண் மேக்கப் கலைஞர்கள் தங்களது மாடர்ன்களை வெள்ளை நிற ஏஞ்சல் உடையில் அழகுபடுத்தி - விழிப்புணர்வு உலக சாதனை

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 100 பெண் மேக்கப் கலைஞர்கள் தங்களது மாடர்ன்களை வெள்ளை நிற ஏஞ்சல் உடையில் அழகுபடுத்தி  விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
 
"பெண்கள் தேவதைகள் அவர்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்"என்ற விழிப்புணர்வு சாதனை நிகழ்ச்சி டாலப் பை மனோ மேக் ஓவர் ஆர்டிஸ்ட் நிறுவனத் தலைவர் திருமதி மனோகரி தலைமையில் நடைபெற்றது
 
இதில் 100 பெண் மேக்கப் கலைஞர்கள் தங்களது மாடர்ன் களுக்கு
வெள்ளை நிறை உடையில் தேவதையை போல் அழகுப்படுத்தி, தனித் தனியாக நடந்து வந்து விழிப்புணர்வு  ஏற்படுத்தி கலம் புக் ஆப் ரெகார்ட்  சாதனைகளை நிகழ்த்தினர்.
 
இந்த உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்ட பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் அனைவருக்கும்  கலாம் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஐகிரி சான்றிதழ் மற்றும் மெடல்கள்  வழங்கினார்.
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமதி மனோகரி....
 
இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் இருந்து மேக்கப் ஆர்டிஸ்ட் தங்களது மாடர்ன்களை அழகுப்படுத்தி இந்த உலக சாதனையை நிகழ்த்தினார்கள்.
 
தங்களது திறமையை வெளிக் கொண்டு வர இந்த உலக சாதனை நிகழ்வு அவங்களுக்கு ஊன்றுதலாக இருக்க வேண்டும் என்று முயற்சியில் தான் இதை நடத்த முற்பட்டு உள்ளேன்.
 
மேலும் பெண்கள் மதிக்கப்பட வேண்டும் போற்றப்பட வேண்டும் என்ற நோக்கக்தில் நடந்தப்பட்டது தான் இந்த  விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்வு என்று தெரிவித்துள்ளார்.