ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (08:05 IST)

அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி- ஸ்ரீ வித்யா

லண்டனில் வசித்து வரும் ராஜகோபால் மற்றும் லக்ஷ்மி தம்பதியரின் மகள் ஸ்ரீ வித்யா  3 நிமிடங்கள் மற்றும் 26 நொடிகளில் 150 உலக நாடுகளுடைய கொடிகளை அந்நாட்டின் பெயர்களைக் கூறி அடையாளம் காட்டிய அதேவேளை அந் நாடுகளுடைய தேசிய மொழிகளின் பெயர்களையும் ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்தார். 
 
சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியை‌ தமிழ்நாட்டின் மதுரையில் இருந்து காணொளிக் காட்சியூடாக கண்காணித்து உறுதி செய்தார் அந் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் அவர்கள்.
 
அதேவேளை, இந்த சோழன் உலக சாதனை நிகழ்வை  ஒருங்கிணைத்து நடத்தினார் சோழன் நிறுவனத்தின் லண்டன் நாட்டிற்கான கிளையின் தலைவர் திருமதி. புஷ்பகலா வினோத்குமார் அவர்கள். 
 
இந்த நிகழ்வில்  குடிவரவு திணைக்கள மூத்த  வழக்கறிஞரும் பெல்தம் தமிழ் சங்கத்தின் தலைவருமான பத்ரிநாத் பாலவெங்கடேசன், பெல்தம் தமிழ் சங்கத்தின் நிர்வாக அறங்காவலர் வினோத்குமார்,  பெல்தம் தமிழ் சங்கத்தின் செயலாளர் ரங்கநாதன், ரகோத்தமன் மற்றும் பெல்தம் தமிழ் சங்கத்தின்  துணைச் செயலாளர் பிரபாகரன் போன்றோர் பங்கேற்று  சோழன் உலக சாதனை படைத்த சிறுமியை  வாழ்த்திப் பாராட்டினார்கள்.