செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2018 (09:29 IST)

பெற்றோரின் கண்டிப்புக்கு பயந்து 10 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

மாணவன் பள்ளியில் செய்த தவறிற்காக, ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோரை அழைத்து வரச்சொன்னதால் பயந்து போன மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் அருகே ரத்தினகிரி அடுத்த மேலகுப்பத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், முருகன் என்பவரது மகன் சுந்தரமூர்த்தி(15) 10-ம் வகுப்பு படித்து வந்தான். சுந்தரமூர்த்தி பள்ளியில் ஒரு மாணவனோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக, மாணவன் திடீரென கீழே விழுந்ததில் காயம் அடைந்தான். உடனடியாக அவனை ஆசிரியர்கள் ஆற்காட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
 
இது குறித்து வகுப்பு ஆசிரியை மாணவன் சுந்தரமூர்த்தியிடம், உன் பெற்றோரை அழைத்து வா என கூறி வகுப்பிலிருந்து வீட்டுக்கு அனுப்பி விட்டார். வீட்டிற்கு சென்ற சுந்தரமூர்த்தி பெற்றோரின் கண்டிப்புக்கு பயந்து கூரையின் மீதுள்ள கம்பியில் துணியை மாட்டி தூக்குப்போட்டு இறந்தார். போலீசார மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.