ஆகஸ்ட் 2020 - எண்ணியல் பலன்கள்: 6, 15, 24

Sugapriya Prakash| Last Modified வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:04 IST)
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
சுக்கிரனை நாதனாக கொண்ட ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக் கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோதைரியம் கூடும். குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம்.

கணவன், மனைவிக்கிடையே  பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள்.

நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி வரலாம். பெண்களுக்கு முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு கிரகசூழ்நிலை சாதகமாக இருப்பதால் உழைப்பிற்கேற்ற ஊதியம் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்.
 
பரிகாரம்: முன்னோர்கள் வழிபாடும் சித்தர்கள் வழிபாடும் நன்று.


இதில் மேலும் படிக்கவும் :