எகிப்து, லிபியா என்று உலகின் பல நாடுகளில் உள்ள சர்வாதிகார தலைவர்களுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் ஆட்சி தலைமையையே ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் ...என்ற கதையாக எகிப்தில் வெடித்த புரட்சி, காஷ்மீரிலும் கலகத்தை கிளப்பி விடுமோ என்று மத்திய அரசு கிலி பிடித்துபோயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.