முதன்மை பக்கம் > செய்திகள் > தகவல் தொழில்நுட்பம் > தொடர்புகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் : புதிய இணையதளம்  Search similar articles
வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட விவரங்கள் அறிந்து கொள்ள புதிய இணைய தளத்தை போக்கவரத்துத் துறை துவக்கியுள்ளது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், போக்குவரத்து பகுதி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் ஆகியவை கணினிமயமாக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து துறையை கணினிமயமாக்குவதன் ஒரு பகுதியாக போக்குவரத்துத் துறை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக இசர்வீசஸ்.டிஎன்.ஜிஓவி.இன்/டிரான்ஸ்போர்ட் என்ற இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சேவைகளைப் பெறுவதற்கு முன்பதிவு செய்தல், குறைகளை கூறுதல் போன்று பல்வேறு பயன்களை பொதுமக்கள் பெறலாம்.

தற்போது போக்குவரத்து அலுவலகங்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணி முடிந்த பிறகு வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம், வாகனங்களின் அனுமதி சீட்டு பெறுதல் உள்ளிட்ட பல தகவல்களை இணையதளம் மூலம் பெற இயலும்.
மேலும்
தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம் : தகவ‌ல் கள‌‌ஞ்‌சிய‌ம்
கணினிக்கு இலவச க்ளீனிங்
மடலேறும் தமிழர்களின் மகாத்மியங்கள். . .
ஈ-மெயில் என்பது ஈசன் கொடுத்த வரம்...