1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்
  6. மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை இரட்டிப்பானது

மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை இரட்டிப்பானது

மெர்சிடிஸ் பென்ஸ் அதி நவீன சொகுசு கார் வில்பிரட் அவுல்பர் இந்தியா
FILE
உலகின் சொகுசுக் கார் உற்பத்தியாளர்களில் முன்னணியில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 573 கார்களை விற்று தனது விற்பனையை இரட்டிப்பாக்கியுள்ளது.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வில்பிரட் அவுல்பர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் 270 மட்டுமே விற்றதாகும், இந்த ஆண்டு அது இரண்டு மடங்கிற்கும் அதிகமாக விற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 3,497 கார்கள் விற்றுள்ளதாகவும், இது கடந்த ஆண்டு விற்ற 1,899 கார்களை விட 84.15 விழுக்காடு அதிகம் என்று கூறியுள்ளார்.

மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் அதி நவீன சொகுசு மாடல்களான சி - கிளாஸ், ஈ - கிளாஸ் மற்றும் எஸ் - கிளாஸ் செடன் மாடவல்களை மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் விற்று வருகிறது.