1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்
  6. பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்க உரிமை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்க உரிமை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

பெட்ரோல்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவைகளின் விலையை நிர்ணயிக்க சுதந்திரம் வேண்டும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வலியுறுத்தி உள்ளது.

பெட்ரோலிய பொருட்களான டீசல், சமையல் எரிவாயு, பெட்ரோல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது. நாப்தா, விமான பெட்ரோல், அதிவேக பெட்ரோல், உலை எண்ணெய் போன்றவைகளின் விலையை பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவைகளின் அடக்கு விலையை விட, குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை மத்திய அரசு வழங்குகிறது.

இந்நிலையில் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, கிரஸின் போன்றவைகளின் விலையை நிர்ணயிக்க சுதந்திரம் வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

இது வருடத்திற்கு ஒரு முறை, பெட்ரோலிய அமைச்சகத்துடன் செயல்பாட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளும். இதில் பெட்ரோலிய நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாடு இல்லாமல், சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்க உரிமை வேண்டும் என்று கூறியுள்ளது.