பரஸ்பர நிதி நிறுவனங்கள் வெளியிடும் யூனிட்டுகள், அதன் வரி விலக்கு, முதலீடு பற்றிய சில கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எந்த நிறுவனத்தின் பங்குச் சந்தையின் தொடர்புடைய சேமிப்பு திட்டங்களை (இ.எல்.எஸ்.எஸ் ) பரிந்துரைக்கின்றீர்கள் ?
இதில் அதிக லாபம் தரும் திட்டம் என்று எதையும் உறுதியாக கூற முடியாது. ஒவ்வொரு நாளும் முன்னணியில் உள்ள நிறுவனம் மாறிக் கொண்டே இருக்கும். எனவே இதுதான் சிறந்த நிறுவனம் என்று எதையும் குறிப்பிட்டு சுட்டிக் காட்ட முடியாது.
ஸ்டேட் பாங்க், பிடிலிட்டி, ஹெச்.டி.எப்.சி, டி.எஸ்.பி. மெரில் லாஞ்ச் பண்ட், கோடக் ஆகிய நிறுவனங்களின் பங்குச் சந்தையின் சேமிப்பு தொடர்புடைய திட்டங்களில் முதலீடு செய்யவது பற்றி பரிசீலிக்கலாம்.
பங்குச் சந்தையின் தொடர்புடைய சேமிப்பு திட்டங்களில் கிடைக்கும் இலாபத்தை, நான் கூடுதல் முதலீடாக கருத முடியுமா ? உதாரணமாக நான் சென்ற வருடம் ரூ.1,000 முதலீடு செய்திருந்தேன். இதில் இருந்து கடந்த வருடம் ரூ.300 இலாபம் கிடைத்துள்ளது. இதில் நான் ரூ. 300 ஐயும் என் முதலீடாக குறிப்பிட முடியுமா?
இந்த திட்டத்தில் செய்த முதலீட்டிற்கு கிடைத்த இலாபத்தையும் சேர்த்து அதிகரித்த தொகையை, கூடுதல் முதலீடாக கருத முடியாது. நீங்கள் இலாபத்தை (டிவிடென்ட்) மீண்டும் முதலீடு செய்யும் திட்டத்தின் யூனிட்டுகளை வாங்கி இருந்தால், இந்த திட்டத்தில் டிவிடென்ட் அறிவிக்கப்பட்ட பிறகு யூனிட் வாங்கி இருந்தால் மட்டுமே முதலீடாக கருத முடியும்.
பங்குச் சந்தையின் தொடர்புடைய சேமிப்பு திட்டங்களில் (இ.எல்.எஸ்.எஸ் ) வரி விலக்கு அனுமதிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு வருமான வரி செலுத்த வேண்டுமா?
தற்போது உள்ள வருமான வரிச் சட்டப்படி பங்குச் சந்தையுடன் இணைந்த எல்லா பரஸ்பர நிதிகளில் இருந்து கிடைக்கும் நீண்டகால முதலீட்டிற்கு வரி விலக்கு உண்டு. இ.எல்.எஸ்.எஸ் திட்டங்கள் மூன்று வருடங்களுக்குள் விற்பனை செய்ய முடியாதவைகள். இதில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கும் வரி விலக்கு உண்டு.
வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் படி இ.எல்.எஸ்.எஸ் யூனிட்டுகளில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரி விலக்கு பெற முடியுமா?
வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் கீழ், எல்லா இனங்களிலும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வருமான வரிவிலக்கு பெற முடியும்.
நான் எஸ்.ஐ.பி. எனப்படும் மாதந்திர சேமிப்பு திட்டத்தின் படி இ.எல்.எஸ்.எஸ். யூனிட்டுகளில் முதலீடு செய்ய விரும்புகின்றேன். எந்த பரஸ்பர நிதி நிறுவனத்தின் யூனிட்டுகளை வாங்கலாம் ?
|