தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விவசாய கடன் தள்ளுபடி, ஏற்கனவே வர்த்தக வங்கிகளில் வசூலாகமல் நிலுவையில் உள்ள கடன்களில் 4 விழுக்காடாகும். இந்த வங்கிகளில் வசூலாகமல் நிலுவையில் உள்ள விவசாய கடன்களில் 25 விழுக்காடாகும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டதால் என்ன நடந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மாநில மின்சார வாரியங்கள் திவாலாகிவிட்டன. புதிய மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்படவில்லை. இதனால் நமது நாடு அதிக அளவு மின் பற்றாக்குறை உள்ள நாடாக மாறிவிட்டது.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிப்பால் சுமால் 4 கோடி விவசாயிகள் பலன் அடைவார்கள். எனவே இது தேர்தல் அறிவிப்புதான்.
இப்பொழுது கடன் தள்ளுபடி செய்யப்படும் தொகையை, ஏற்கனவே விவசாயிகள் செலவழித்துவிட்டார்கள். இதனால் இப்பொழுது வாங்கும் சக்தி உடனடியாக அதிகரித்துவிடாது. சில காலத்திற்கு பிறகு அசலும் வட்டியும் சேர்ந்து சந்தையில் பொருட்களை வாங்குவதற்கு பயன்படும்,.
நிதி நிலை : தற்போதைய கணக்கு பதிவு செய்யும் முறையில் வரவு-செலவு கணக்கு சரியாகவே இருக்கும். ஆனால் இது பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கொடுக்கும் கடன் பத்திரங்கள், உணவு மானியம், உர மானியம் மற்றும் ஆறாவது சம்பள கமிஷனால் ஏற்படும் கூடுதல் செலவு, இத்துடன் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.60,000 கோடி கடன் தள்ளுபடி ஆகியவை கணக்கில் எடுகத்கப்படாமல் உள்ளன. இதை எல்லாம் தவிர்ததுவிட்டு நிதி அமைச்சர் 3.1 விழுக்காடு வருவாய் பற்றாக்குறை உள்ள பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளதற்கு, நிதி அமைச்சரை பாராட்டலாம்.
உற்பத்தி வரி மாற்றம்: வாகன உற்பத்தி துறைக்கு உற்பத்தி வரி குறைத்து இருப்பதற்கு ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு பலன் அளிக்கும். இதன் விலை குறைவதால் இந்த வாகனங்களை வாங்குபவர்கள் இலாபம் அடைவார்கள். மருந்து உற்பத்தி நிறுவனங்களும் உற்பத்தி வரி குறைப்பை வரவேற்கும். பெட்ரோலிய நிறுவனங்கள் பொருளின் மதிப்பின் மீது விதிக்கப்படும் வரிக்கு பதிலாக குறிப்பிட்ட விழுக்காடு வரி விதிக்கப்படும் என மாற்றியுள்ளதால் பலன் அடையும். இதன் எதிர்கால வளர்ச்சிக்கு பயனளிக்கும்.
நேரடி வரி : வருமான வரி குறைக்கப்பட்டு இருப்பதால் வருடத்திற்கு ரூ.1,50,000 வருவாய் உள்ளவர்களுக்கு ரூ.4,000 வரை மீதமாகும். ரூ.5 இலட்சம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு ரூ.50,000 வரை மீதமாகும். பெற்றோர்களுக்கு உடல் நல காப்பீடிற்கு செலுத்தும் கட்டணம் வருமான வரி சட்டம் 80 டி விதியின் கீழ் வரி தள்ளுபடி கணக்கில் சேர்க்கலாம் என்று அறிவித்து இருப்பது வரவேற்க வேண்டிய அம்சம். கூடுதல் வரி, நிறுவன வரி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இவை மாற்றப்படவில்லை. பங்கு ஈவு தொகை மீது இரட்டை வரிமுறையை தவிர்க்க மீண்டும் வருமான வரி சட்டத்தில் 80 எம் பிரிவு கொண்டுவரப்பட்டுள்ளது.
சேவை வரி : பணவீக்கத்தை கருத்தில் கொண்டு சேவை வரி 12.5 விழுக்காடு நீடிக்கும் என அறிவித்து இருப்பது வரவேற்க வேண்டிய அம்சம். 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து மத்திய விற்பனை வரி நீக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும். பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ள சிறிய நிறுவனங்களின் வர்த்தகம் வருடத்திற்கு ரூ.10 லட்சத்திற்குள் இருந்தால் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 65 ஆயிரம் சிறிய நிறுவனங்கள் பயன் பெறும். சேவை வரிவிதிப்பில், பல்வேறு புதிய சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
Courtesy : personalfinancewindow.com
|