முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
முதலீட்டாளர்களுக்கு பொறுமை தேவை!
- அஜய் பக்கா
பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

மத்திய பட்ஜெட் அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் பருவமழை நன்கு பொழியும் என்ற நம்பிக்கையுடன் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இருந்து, பல விஷயங்கள் தெளிவு படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவும் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை : பங்குச் சந்தையில் பங்குப் பரிவர்த்தனை மீதான வரியில் மாற்றமில்லை. அதிக அளவு வர்த்தகம் நடைபெறும், பண்டக பரிவர்த்தனை சந்தையின் வர்த்தகம் மீது வரி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. குறுகிய கால முதலீடு மீதான வரி 15 விழுக்காடாக அதிகரித்திருப்பது அதிருப்தியை உண்டாக்கும் (முன்பு இந்த வரி 10 விழுக்காடாக இருந்தது).

இந்த பட்ஜெட் அறிவிப்புகளினால் கடன் பத்திரங்கள் மீதான முன்பேர வர்த்தகம், அந்நியச் செலவாணி முன்பேர வர்த்தகம் அதிகரிக்கும். பங்கு பரிவர்த்தனைகான முத்திரை வில்லை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. முதலீடு, பங்குகளை வாங்கி விற்பனை செய்வது உட்பட எல்லா வகை பரிமாற்றத்திற்கும் பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பரஸ்பர நிதிகள் (மியூச்சுவல் பண்ட்) : பரஸ்பர நிதிகளுக்கு சென்ற வருடத்தைப்போல், இந்த வருடம் எந்த சலுகையும் இல்லை. குறுகியகால முதலீடு இலாபத்தின் மீதான வரி, 15 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் குறுகிய காலம் முதலீடு செய்பவர்கள், நீண்டகால முதலீட்டாளர்களாக மாறுவார்கள். இதனால் பரஸ்பர நிதி நிறுவனங்கள் பயன் பெறும்.

அத்துடன் " யூலிப்" எனப்படும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் திட்டத்துடனான காப்பீடு திட்டங்களுக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஏற்கனவே செலுத்தி வருகின்றன. தற்போது யூலிப் திட்டங்களுக்கு சேவை வரி விதித்திருப்பது, பரஸ்பர நிதி நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்களுடன் சம அளவில் போட்டியிட முடியும்.

நல திட்டங்கள் : சென்ற வருடத்தைவிட கல்விக்கு ஒதுக்கீடு 15 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ரூ.34 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு சென்ற வருடத்தை விட ஒதுக்கீடு 20 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த துறைக்கு ரூ.16,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரத் நிர்மான் திட்டத்திற்கு ரூ.31 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற வீட்டு வசதி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தொழிலாளர்களின் காப்பீடு, வேலை வாய்ப்பு போன்ற நல திட்டங்கள் அதிகரிக்கும்.

விவசாய கடன் தள்ளுபடி : இந்த பட்ஜெட்டில் விவசாய கடன் ரூ.60,000 கோடி தள்ளுபடி என்ற அறிவிப்புதான் முக்கியமாக வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. இது அடுத்த தேர்தலை மனதில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்க கடன் தள்ளுபடி அறிவிப்பு, அடுத்த வருடங்களிலும் பல விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு, நாட்டின் பொருளாதார நிலைமையை கவனத்தில் கொள்ளாமல், தேர்தலில் வாக்குகளை கவருவதற்காகப் பல சலுகைகளை அறிவிப்பார்கள்.
1 | 2  >>  
மேலும்
பங்குச் சந்தை சரிவு காரணம்?-‌சிதம்பரம்
உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்?
பங்குச் சந்தையை நிர்ணயிக்க போவது யார்?
கூடுதல் வரி நிரந்தரமானதா?
பட்ஜெட்- இல்லத்தரசிகளே நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
பங்குச் சந்தை சரிவுக்குக் காரணம்?