முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தால் அதிக இலாபம்!
பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதை விட, பரஸ்பர நிதிகள் மூலமாக முதலீடு செய்வதால் அதிக வருவாய் கிடைக்கிறது.

பங்குச் சந்தையிலும், நிதி சந்தையிலும் முதலீடு செய்பவர்கள் நேரடியாக முதலீடு செய்கின்றனர். பங்குச் சந்தையில் விற்பனையாகும் பங்குகளில், எந்த பங்கு வாங்கினால் அதிக இலாபம் கிடைக்கும். குறிப்பிட்ட பங்கு விலை அதிகரிக்குமா, குறையுமஎன்பதை கணித்து பங்குகளை வாங்க வேண்டும்.

பங்குச் சந்தையில் தினமும் பங்குகளின் விலை அதிகரிப்பது அல்லது குறைவது என்ற போக்கு நிலவுகிறது. பங்கு சந்தையின் போக்கு, பங்கு சந்தையில் முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள், அத்துடன் தினசரி வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் ஆகியோரை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டு எண்கள் குறையும் போதே சில முதலீட்டாளர்களின் ரத்த அழுத்தமும் மாறுபட துவங்கும். குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் அன்றாடம் நிலவரத்தை உண்ணிப்பாக கவனித்து, விற்பனை செய்வது அல்லது வாங்குவது என்பது கடினமான காரியம்.

இவர்களுக்காகவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் யூனிட்டுகளை வெளியிட்டு முதலீடு திரட்டுகின்றன. இதை பங்கு மற்றும் நிதிச் சந்தை நிபுணர்கள் முதலீடு செய்கின்றனர். இந்த முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் யூனிட் வாங்கியவர்களுக்கு பிரித்து தரப்படுகிறது.

சென்ற வருடம் பங்குச் சந்தையில் நேரடியாக மூதலீடு செய்ததை விட, பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலமாக செய்த மூதலீட்டிற்கு அதிக வருவாய் கிடைத்திருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 47.1 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 54.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆனால் 152 பரஸ்பர நிதிகளின் வருவாய், பங்குச் சந்தை குறியீட்டு எண்களின் வருவாயை விட அதிகமாக உள்ளது வேல்யூ ரிசர்ச் என்ற பங்குச் சந்தை ஆய்வு நிறுவனத்தின் ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

2007 ஆம் ஆண்டில் 209 பரஸ்பர நிதிகளில் 13 முதலீடு திட்டங்களில் முதலீடு செய்யும் யூனிட்டுகளை வாங்கியவர்களின் முதலீட்டின் மதிப்பு 90 முதல் 112 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

வரி சேமிப்புடன், பங்குச் சந்தை மற்றும் நிதிச் சந்தையில் முதலீடு செய்யும் 209 பரஸ்பர நிதி திட்டங்களில், 57 திட்டங்கள் மட்டுமே சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகளை விட குறைவான வருவாய் கிடைத்துள்ளது.

பரஸ்பர நிதிகளில் டாராஸ் லிப்ரா டாக்சீல்ட், ஜே.எம்.பேசிக் ஃபண்ட் ஆகிய இரண்டு பரஸ்பர நிதி திட்ட யூனிட்டுகளின் வருவாய் 111 விழுக்காடாக உள்ளது.
  1 | 2  >> 
மேலும்
பருத்தி ஏற்றுமதி இருமடங்கு உயர்வு!
விவசாயிகளின் மேம்பாட்டிற்கு உதவும் வீடியோகா‌ன்பரன்சிங்!
பெட்ரோல், டீசல் விலை உயர்த்த ஆலோசனை! தடுப்பாரா சோனியா?
எலிகளின் படையெடுப்பு : பட்டினியில் மக்கள்!
மிஜோரம் மாநிலத்தில் சுண்டெலி வால் இரண்டு ரூபாய்!
பங்குச் சந்தை : பார்டிசிப்பேட்டரி நோட் மிரட்டல்?