1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

நவராத்திரியின் போது கொலு அமைக்கும் முறைகள் என்ன...?

நவராத்திரியின்பொழுது கொலு வைப்பது சிறப்பான அம்சம் ஆகும். பல படிகளை கொண்ட மேடையில் பொம்மைகளை வைத்து அலங்கரிப்பது ஆகும். அவரவர்களின் வசதிக்கேற்ப கொலுப்படிகளை வைப்பார்கள்.

முதல் படியில் ஓரறிவு உயிரினங்கள் புல், செடி, கோடி தாவர பொம்மைகளை வைப்பார்கள்.
 
இரண்டாம் படி: இரண்டறிவு உயிரினம் சங்கு, ஆமை, நத்தை பொம்மைகளை வைக்க வேண்டும்.
 
மூன்றாம் படி: மூன்று அறிவு உயிரினம் கரையான், எறும்பு போன்றவை வைக்கலாம்.
 
நான்காம் படி: நான்கு அறிவு கொண்ட உயிரினம்  நண்டு, வண்டு பொம்மைகள் வைக்கலாம்.
 
ஐந்தாம் படி: ஐந்து அறிவு கொண்டுள்ள உயிரின பொம்மைகளை அதாவது விலங்குகள், பறவைகள் பொம்மைகளை வைக்க வேண்டும்.
 
ஆறாம் படி: ஆறு அறிவு படைத்த உயர்ந்த மனித பொம்மைகளை வைக்கலாம்.
 
ஏழாம் படி: மகான்கள், ரிஷிகள், முனிவர் பொம்மைகளை வைக்கலாம்.
 
எட்டாம் படி: நவகிரக அதிபதிகள், தேவர்களை வைக்கலாம்.
 
ஒன்பதாம் படி: மூன்று மூர்த்திகளின் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) பொம்மைகளையும்,  அவர்களின் தேவிகளின் பொம்மைகளையும் வைத்து அலங்கரிக்கலாம். ஆதிபராசக்தி அன்னை நடுநாயகியாக வைக்கலாம், தசதாவதாரம் பொம்மைகளை வைக்கலாம்.
 
ஆறறிவு படைத்த மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே கொலுப்படியின் தத்துவம் ஆகும்.
 
நவராத்திரி நாட்களில் மூன்று தேவிகளை மனதார வணங்கி வந்தால் ஏழ்மை நீங்கும்.
 
நவராத்திரி நாட்களில் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்கள், கன்னி பெண்களுக்கு குங்குமம், மஞ்சள், வெற்றிலை பாக்கு, பூ, பழம், சீப்பு, கண்ணாடி, தட்சணை, ரவிக்கை, சுண்டல், பாயசம் அல்லது ஏதேனும் நைவேத்தியத்தை கொடுத்தால் நற்பலன்கள் உண்டாகும். அவரவர்களின் வசதிக்கேற்ப பொருட்களை வழங்கலாம். ஏதேனும் ஒரு பழத்தை வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞ்சள் வைத்தும் கொடுக்கலாம்.