1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

நவராத்திரியின் மூன்றாம் நாள் பூஜை முறைகள் என்ன தெரியுமா....?

முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரியின் 9 நாட்களும் வழிபடுவதுடன், ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய  நைவேத்தியங்களையும் பார்ப்போம்.

நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 18-ம் தேதி விஜயதசமி வரை 10 நாட்கள் நடக்கிறது. நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். 
 
மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும். நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள்  லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள்  சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள்.
 
நவராத்திரி மூன்றாம் நாள்.: வடிவம் - வாராகி (மக்கிஷனை அழித்தவள்). பூஜை.: 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.
 
கோலம்.: மலர் கோலம் போடவேண்டும். பூக்கள்.: செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியம்: கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல். பலன்.: தணதானியம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.