1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (15:55 IST)

பேய் மிரட்டி மூலிகையின் அற்புத மருத்துவ குணங்கள் என்ன...?

பேய் மிரட்டி இலையைக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க, விடாத வாதக்காய்ச்சல் குணமாகும்.

பேய் மிரட்டி இலையை சாறு எடுத்து அரையங்குல அளவு எடுத்து அத்துடன் அரை சங்களவு நீர்விட்டு கொதிக்க வைத்து 2 மணிக்கு ஒருமுறை ஒரு சங்களவு குடித்து வர காலரா, அம்மை குணமாகும்.
 
பேய் மிரட்டி இலைச்சாறு 5 சொட்டு எடுத்து வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கப் பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்கும்.
 
பேய் மிரட்டி இலையைக் கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 50 மில்லியளவு குடித்து வர சீதவாதக் காய்ச்சல், முறைக் காய்ச்சல், மலக் கழிச்சல் குணமாகும்.
 
பேய் மிரட்டி இலையை 2 மட்டும் எடுத்து ஒரு கைப்பிடி நெற்பொறியுடன் சேர்த்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியளவு வீதம் 3 மணிக்கு ஒருமுறை குடிக்கக் கொடுக்க காலரா குணமாகும்.
 
பேய் மிரட்டி இலையை 40 கிராம் அளவு எடுத்து இடித்து, தனியாக ஒரு சட்டியில் மிளகு 10 கிராம், ஓமம் 3 கிராம் சேர்த்துப் போட்டு வறுத்துக் கருகிய சமயம் 1/2 லிட்டர் நீரை விட்டு, கொதிவரும்போது பேய் மிரட்டி இலையைப் போட்டு, 125 மில்லியளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி 15 மில்லியளவில் 3 வேளையாகக் குடித்து வர குழந்தைகள் பல் முளைக்கும் போது காணும் மாந்தம் குணமாகும்.
 
பசி மிகுத்தல், குடல் வாயுவகற்றல்,வியர்வை பெருக்குதல், காச்சல் தணித்தல், சதை நரம்பு ஆகியவற்றைசுருங்கச் செய்தல், அசிவு தணித்தல் ஆகிய குணங்களையுடையது.