சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் முள்ளங்கி கீரை !!
முள்ளங்கிக் கீரையில் சத்துகள் நிறைந்துள்ளன. முக்கியமான உயிர்ச் சத்துகளும் உப்புகளும் கொண்டது. சுண்ணாம்புச் சத்து இக்கீரையில் அதிகம் உள்ளது. இரும்புச் சத்து மற்றும் ஆக்கார்பிக் அமிலம் முதலியவை நிறைய இக்கீரையிலும் உள்ளது.
முள்ளங்கி கீரையானது இருதயத்திற்கு பலம் சேர்க்கும். மேலும் இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஒரு முறையாவது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
முள்ளங்கி கீரை பயன்கள் சிறந்த கீரை வகைகளில் ஒன்றாகும். முள்ளங்கியில் இருவகை உண்டு. ஒன்று வெள்ளை முள்ளங்கி மற்றொன்று சிவப்பு முள்ளங்கி. இந்த இரண்டு வகைக் கீரைகளுமே சிறப்பான குணங்கள் பெற்றவை. இவ்விலைகள் அகன்றும் நுனிகுறுகியும் இருக்கும்.
முள்ளங்கி கீரையில் உயிர்ச் சத்தான வைட்டமின் ஏ மற்ற கீரைகளில் உள்ளது அரிசி உணவு உண்பவர்களுக்கு இக்கீரை ஒரு மறு உணவாகவே அமையும். இக்கீரையை அரிசி சோறுடன் சேர்த்து உண்ணும் போது அதிகமான சுண்ணாம்புச் சத்துக் கிடைக்கிறது.
முள்ளங்கி கீரைய நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும். மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கி கீரைக்கு உண்டு.
முள்ளங்கிக் கீரையிலிருந்து புரதச் சத்து வியாபார ரீதியாகத் தயாரிக்கப்படுகிறது. புரதச் சத்துக் குறைவை நிவர்த்தி செய்வதற்கு இக்கீரை பயன்படுகிறது.