வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (11:47 IST)

எளிதில் கிடைக்கும் இந்த காயில் இத்தனை மருத்துவ குணங்களா...!!

100 கிராம் எடையுள்ள பீர்க்கங்காயில் சுண்ணாம்புச்சத்து 18 மி.கி. அளவும், மாவுச்சத்து 3 கிராம் அளவும், எரிசக்தி 17  கலோரியும், பாஸ்பரஸ் 26 மி.கி. அளவும் உள்ளது.


வைட்டமின் பி2, வைட்டமின் சி, கரோட்டீன், நியாசின், இரும்புச்சத்து,  அயோடின் மற்றும் ஃபுளோரின் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகப் பீர்க்கங்காய் விளங்குகிறது.
 
பீர்க்கங்காய் இனிப்புச் சுவையுடையது என்பது மட்டுமின்றி எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும் விளங்குகிறது. உடலுக்குக்  குளிர்ச்சி தரும் பீர்க்கங்காய், மிகக் குறைந்த அளவேயான கொழுப்புச் சத்தைக் கொண்டிருக்கிறது. இதனால், உடல் எடையைக்  குறைக்க விரும்புவோர்க்கு நல்ல உணவாக அமைகிறது. இதில் மிகுந்த நீர்ச்சத்து இருப்பதும் எடை குறைவதற்கு முக்கிய  காரணமாக அமைகிறது.
 
பீர்க்கங்காயின் சாறு மஞ்சள் காமாலை நோய்க்கும் அருமருந்தாக உதவுகிறது. பீர்க்கங்காயை அரைத்துப் பெறப்பட்ட சாறு அல்லது காய்ந்த பீர்க்கங்காயின் விதை மற்றும் சதைப்பகுதியின் சூரணம் மஞ்சள் காமாலை நோயை மறையச் செய்யும்.
 
பீர்க்கங்காய் சாறு எடுத்து உடன் இனிப்பு சேர்த்து வெறும் வயிற்றில் சில நாட்கள் குடித்து வருவதால் பித்தத்தால் வந்த  காய்ச்சல் தணிந்து போகும்.
 
பீர்க்கங்காய் சாறு அரை டம்ளர் அளவு அன்றாடம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வருவதால் அதிலுள்ள பீட்டா  கரோட்டீன் சத்து கிடைக்கப்பெற்று கண் பார்வை தெளிவு பெறும். கண்களுக்கு ஆரோக்கியம் மேலோங்கும். 
 
பீர்க்கங்காயில் ரத்தத்தைச் சுத்தப்படுத்தக்கூடிய வேதிப் பொருட்களும் மிகுந்துள்ளன.  ரத்தம்  சுத்தமாவதோடு கெட்டுப் போன ஈரலைச் சீர்செய்து மீண்டும் புத்துணர்வோடு செயல்படவும் பீர்க்கங்காய் கை கொடுக்கிறது.