புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (16:08 IST)

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மாதுளம் பூ !!

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.


மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
 
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
 
மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடையும் உடலும் புத்துணர்வு பெறும்.
 
அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றம் கொள்கிறது. இதனால் வயிற்றுக் கடுப்பு உண்டாகிறது. இவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து அருந்துவது  நல்லது.
 
மாதுளம் பூவை சுத்தம் செய்து அவற்றை உரலில் போட்டு இடித்துப் பிழிந்து, ஒரு அவுன்ஸ் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை அவுன்ஸ் சுத்தமான தேனையும் சேர்த்து கலக்கி காலை மற்றும் மாலையில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
 
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.