1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (16:04 IST)

எண்ணற்ற மருத்துவ பலன்கள் நிறைந்துள்ள கொள்ளு !!

Kollu
‘கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உள்ளது.


கொள்ளு ஓரு ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம். இதை  ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன.

கொள்ளு என்பது ஒரு அற்புதமான உணவாகும். முக்கியமாக இதனை குதிரைக்கு கொடுக்கப்படும் உணவாக விளங்குகின்றது. இதற்க்கு கரணம் கொள்ளு உண்டால் உடலின் சக்தி அதிகரிக்கும் மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை கரைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.

கொள்ளு பயரில் அதிக அளவில் இரும்பு சத்து உள்ளது. இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இரத்த சிவப்பனுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.

கொள்ளுவை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து அந்த நீரை அருந்தினால், ஜலதோஷம் குணமாகும். ரசமாக வைத்து சாப்பிட்டால், உடல்வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் சரியாகும். சுவாசத் தொந்தரவு நீங்கும். காய்ச்சலையும் குணமாக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன.

சிறுநீரக கற்களைக் கற்களை கரையக்கூடிய சில சேர்மங்கள் கொள்ளுப் பயரில் உள்ளன. கொள்ளு பயறு சாப்பிடுவது உடல் பருமனை குறைக்க உதவுகிறது. ஏனெனில் இதில் உள்ள பினோல் காரணமாக கொழுப்பு திசுக்களை தாக்கும் திறனைக் கொண்டுள்ளது.

Edited by Sasikala