செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வியாழன், 13 அக்டோபர் 2022 (15:49 IST)

கரும்பில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

கரும்புச்சாறு விற்பனை செய்யும் கப்பல் ஊழியர்
கரும்பை உண்டால் உடனடி ஆற்றல் கிடைக்கும். ஏனெனில் இதில் அதிக அளவில் இயற்க்கை சர்க்கரை நிறைந்துள்ளது. வேலையினை ஆரம்பிப்பதற்கு முன்னால் சிறிதளவு கரும்பு சாற்றினை குடித்தால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும்.

கரும்புச்சாறு விற்பனை செய்யும் கப்பல் ஊழியர்

கரும்பில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

கரும்பில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் பிளவனோய்ட்ஸ் நிறைந்துள்ளது. இது உங்களின் சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.

கரும்பு சாற்றில் அதிக அளவில் எலெக்ட்ரோலைட்க்கள் நிறைந்துள்ளது. இவை கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும்.

கரும்பில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இவை உங்களின் சரும ஆரோக்கியத்தினை மேம்படுத்தி உங்களுக்கு தோல் சுருக்கம், வயதான தோற்றம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

கரும்பில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை தினமும் உண்டு வரும்பொழுது உங்களின் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

Edited by Sasikala