வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (10:31 IST)

சருமத்தை மென்மையாக்க எலுமிச்சை சாறு எவ்வாறு உதவுகிறது...?

lemon
எண்ணெய் வழியும் சருமத்தில் முகப்பரு, கரும்புள்ளி என பல சரும பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே எண்ணெய் பசையான சருமத்திற்கு நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது.


எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தின் எண்ணெய் மூலக்கூறுகளை உடைத்தெறியும். அதனால் சருமம் மென்மையாக விளங்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை தண்ணீருடன் கலந்து, அந்த கலவையை பஞ்சுருண்டையை பயன்படுத்தி முகத்தில் தடவுங்கள். அதிலும் எண்ணெய் பசை சருமத்தை கொண்டவர்கள், இதனை தினசரி செய்ய வேண்டும்.

எலுமிச்சை சாறு, சருமத்தை மென்மையாக வைக்க உதவும். அதிலும் முகத்தில், முட்டியில், முழங்கையில் எலுமிச்சை சாற்றை தடவினால், அவைகள் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். குறிப்பாக எலுமிச்சையின் தோலை முகத்தில் தேய்த்தால் அது இயற்கை தெம்பூட்டியாகவும், இறந்த செல்களை அகற்றவும் செய்யும்.

மேலும் பொலிவிழந்த வறண்ட சருமத்திற்கு எலுமிச்சை கலந்த எண்ணெயை உபயோகப்படுத்தலாம். அழகிய இதழ்கள் எலுமிச்சை பானம் இதழ்களுக்கும் பயனுள்ளதாக விளங்குகிறது. வறட்சி, வெடிப்பு மற்றும் வெம்புண் போன்றவைகளால் உதடு பாதிக்கப்பட்டிருந்தால், உதட்டில் எலுமிச்சை சாற்றினை தடவுங்கள். எலுமிச்சை சாற்றை பாலின் நுரை மற்றும் தேனுடன் கலந்து உதட்டின் மீது தடவலாம்.

வியர்வை, வெப்பம் மற்றும் தூய்மை கேடு இவை அனைத்தும் அக்குளை கருமையடையச் செய்து துர்நாற்றத்தை கொடுக்கும். எலுமிச்சை சாற்றில் சிறிய பஞ்சுருண்டையை முக்கி, அக்குளுக்குள் தடவுங்கள். வேண்டுமெனில் எலுமிச்சையை அப்படியே தடவலாம். இனி என்ன, நீங்கள் பயமில்லாமல் ஸ்லீவ்லெஸ் சட்டையை அணியலாம்.