புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 2 மே 2022 (17:08 IST)

குடைமிளகாயின் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் !!

பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களில் குடைமிளகாய் கிடைக்கிறது. இருந்தாலும் பச்சை குடைமிளகாய்கள் தான் பெருமளவில் சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றது.


குடைமிளகாயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலேட், டயட்டரி ஃபைபர் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் வளமான மூலமாகும். இதில் கால்சியம், துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம், வைட்டமின் ஈ, வைட்டமின் கே போன்றவை உள்ளன.   

இரத்த சோகை உள்ளவர்கள் உணவில்  குடைமிளகாய் சேர்த்து சாப்பிடுவது உடலின் இரும்புச் சத்தை அதிகரிக்க உதவுவதோடு இரத்த சோகையை  குறைக்கிறது.

நார்ச்சத்து நிறைந்திருப்பதைத் தவிர, குடைமிளகாய் நல்ல அளவு வைட்டமின் பி 6, ஃபோலேட், லைகோபீன் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது இவை அனைத்தும் இரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருப்பதை விட மிக அதிக அளவு வைட்டமின் சி குடைமிளகாயில் உள்ளது. வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதாகும்.  

குடைமிளகாயில் உள்ள வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் உடலை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.