புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (16:37 IST)

தொப்பை விரைவில் குறைய சில எளிய வழிமுறைகள் !!

திரிபலா பொடியை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதோடு கடுங்காய், நெல்லிக்காய் பொடி சேர்த்துக்கொண்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.


தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் உண்டு வந்தாலோ அல்லது அதை சாறாக்கி குடித்தாலோ தொப்பை விரைவில் குறையும்.

வெந்தயம் : வெந்தயத்தை இரவு ஊற வைத்து அதன் தண்ணீரை வெறும் வயிற்றில் தினமும் குடித்து வர தொப்பை கடகடவென குறைந்துவிடும்.

அதிக தண்ணீர் அருந்துவதும் தொப்பையைக் குறைக்கும். பசி இல்லாமல் சாப்பிடும் உணவு உடல் எடைக்கு வழிவகுக்கும். எனவே பசிக்கும்போது மட்டும் நன்கு சாப்பிடுங்கள். அதுவும் சம அளவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

எலுமிச்சை சாற்றை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து காலை குடித்துவர தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும். கொள்ளுவை ரசமாகவோ, முளை கட்டிவேக வைத்தோ இரண்டு நாளைக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு வகையில் உண்டு வருவது தொப்பையைக் குறைக்கும்.

ஜீரண சக்தி அதிகரித்து தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும் நார்ச்சத்து உடலுக்கு மிக அவசியமானது. நார்ச்சத்து நிறைந்த உணவை தவறாமல் உட்கொள்வது உடலுக்கு மட்டுமல்ல தொப்பையையும் குறைக்கும்.

மூச்சு பயிற்சி : தினமும் தியான நிலையில் 30 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தாலும், தொப்பை குறைய ஆரம்பிக்கும். மேலும் நடை பயிற்சி செய்தாலும் தொப்பை குறைவதோடு, கால்களும் வலுவாகும்.