வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (16:14 IST)

மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் முல்லை பூ !!

முல்லை மலரை தலையில் சூடிக்கொண்டு அதன் மனத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி, மனத்தெளிவு உண்டாகும்.


முல்லை பூவின் சாற்றினை எடுத்து வரத்திற்கு மூன்று முறை 2 அல்லது 4 துளிகள் வீதம் கண்ணில் விட்டு வரக் கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து கண் பார்வை குறைவு குணமாகும்.

ஒரு கைப்பிடி அளவுள்ல முல்லை பூவை எடுத்துக் கொண்டு அதைத் தண்ணீர் விட்டுக் காய்ச்சி அது வற்றியதும் 15 மில்லி அளவு அதை இரண்டு முறை ஒரு நாளுக்குக் குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.

முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. முல்லைப் பூ மட்டுமல்லாமல், அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.