வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (15:30 IST)

அஜீரண கோளாறுகள் ஏற்படாமல் காக்கும் சௌசௌ !!

Chow Chow
சௌசௌவை பொரியல் செய்தோ, குழம்பில் சேர்த்தோ அல்லது மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சூப் செய்தோ சாப்பிட்டு வர பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.


சவ்சவ்வில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. சௌசௌவை அன்றாட உணவில் பயன்படுத்தி வருபவர்களுக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது.

சௌசௌ நீர்ச்சத்து அதிகமுள்ள காயாகும். ஆதலால் சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும். மேலும், சிறுநீர் சம்பந்தமான நோய்களிலிருந்தும் உடலை பாதுகாக்கும்.

உடல் வளம் பெற சௌசௌவை நாம் உண்ணும் உணவில் தவறாமல் சேர்த்து கொள்வது அவசியமாகும். இதில் உள்ள வைட்டமின்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும்.

சௌசௌவானது நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தும். சௌசௌவில் உள்ள கால்சியமானது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. மேலும் சௌசௌவில் உள்ள வைட்டமின் சி, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.