வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 7 மார்ச் 2022 (16:32 IST)

ரத்த சோகையில் இருந்து விடுபட உதவும் பீர்க்கங்காய் !!

சிறுநீரக கோளாறுகளுக்கு  நன்கு  முற்றிய பீர்க்கங்காயை பயன்படுத்தப் படுகிறது. பீர்க்கங்காயில்  இருக்கும்  வைட்டமின்கள் தோல் நோய்களையும் மற்றும் நீரழிவு நோய்களையும் குணப்படுத்துவதில் உதவுகின்றன.


பீர்க்கங்காயை உணவில் எடுத்து கொள்ள அதிகபடியான காய்ச்சல், சளி தொல்லை, இருமலால் அவதிபடுவோருக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. ரத்த சோகையில் இருந்து விடுபட பீர்க்கங்காய் சாப்பிடலாம்.

பீர்க்கங்காயின் பழங்கள் நன்மை தர கூடியதே. அதை வாந்திக்கு பயன்படுத்தலாம்.  சுவாச கோளாறுகளுக்கும் அருமருந்து. மண்ணீரலில் ஏற்படும் புண்களை குணப்படுத்த பீர்க்கங்காயின் சாற்றை அதில் போடுவதன் மூலம் விரைவில் குணம் அடையும்.

உடலில் இருக்கும் எண்ணெய் சருமத்திற்கு இதனை பயன்படுத்த நல்லது. இதில் அடங்கி இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.

சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.