1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (11:14 IST)

அன்றாட உணவில் வெள்ளை வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பலன்கள் !!

இதய நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயம் சேர்ப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகிறது மற்றும் ஆரோக்கியமான இதய செயல் பாட்டிற்கு வெள்ளை வெங்காயம் பெரிதும் உதவுகிறது.


உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் இரத்த உறைவுகளில் இருந்து பாதுகாக்கிறது. வெள்ளை வெங்காயத்தில் உள்ள குரோமியம் மற்றும் சல்பர் போன்ற உள்ளடக்ககள் இரத்த சர்க்கரையை சீராக்க மற்றும் இரத்த சர்க்கரையை குறைக்கவும் வெள்ளை வெங்காயம் உதவுகிறது.

வெங்காயத்தை அடிக்கடி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் வயிறு மற்றும் கல்லீரல் புண்கள் குணமாகும். வெங்காயச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் சம அளவு கலந்து குடித்தால் நீரிழிவு நோய் குறையும்.

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வறுத்து, பனங்கற்கண்டு சேர்த்து துவையல் செய்து, காலை மாலை இரு-வேளையும் சாப்பிட்டுவந்தால் மூல நோய் தணியும்.

வெங்காயச் சாற்றை சூடான சாதத்தில் ஊற்றிப் பிசைந்து உப்பு சேர்த்து நகச்சுத்தியில் வைத்துக் கட்டுப்போட்டால் விரைவில் பிரச்னை தீரும். சின்ன வெங்காயத்தை, வெல்லம் மற்றும் நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் பித்தம் குறையும்.