1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (10:23 IST)

பல்வேறு நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் வைத்திய குறிப்புகள் !!

கருவளையங்கள் விரைவில் நீங்க 2 ஸ்பூன் தக்காளி பேஸ்ட் உடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 சிட்டிகை கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 10-20 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை மேற்கொள்ள கருவளையம் சீக்கிரம் போய்விடும்.


காதுகளில் தொற்றுக்களால் வலியை உணர்ந்தால், ஒரு துளி பூண்டு சாற்றினை ஊற்றுங்கள். இதனால் காது வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இயற்கை வழியில் இதிலிருந்து விடுபட நீரில் சிறிது சோம்பு சேர்த்து கொதிக்க வைத்து, அந்த நீரை குடிக்க வாய்வு பிரச்சனை நீங்கும். இல்லாவிட்டால் உணவு உண்ட பின் சிறிது சோம்பை வாயில் போட்டு மெல்லுங்கள். இதுவும் வாய்வு பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதன் மூலம், அதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் குமட்டல், நெஞ்செரிச்சல், செரிமான பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றில் இருந்து விடுவிக்கும்.

துளசி சாறு மற்றும் பூண்டு சாற்றினை ஒன்றாக கலந்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து தினமும் மூன்று மணிநேரத்திற்கு 1 முறை 1 டீஸ்பூன் சாப்பிட கடுமையான இருமல் சரியாகும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் 4 டேபிள் ஸ்பூன் தேனை ஊற்றி மூடி வைத்து, சுடுநீர் பாத்திரத்தில் 2 மணிநேரம் வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை 1 டேபிள் ஸ்பூன் சாப்பிட, இருமலில் இருந்து விடுபடலாம்.

வெள்ளரிக்காயை துருவி முகம், கண்கள் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் விரைவில் மறையும்.

இரும்புச்சத்து குறைபாடு அல்லது இரத்த சோகை உள்ளவர்கள் பாலில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு வர, உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த சோகை சீக்கிரம் குணமாகும்.