ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (12:49 IST)

செல்போன் விபரீதம்: துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவன்

டெல்லியில் மாணவன் ஒருவனுக்கும் அவனது தங்கைக்கும் ஏற்பட்ட செல்போன் தகராறால் மனமுடைந்த மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்தவர் ரன்பீர் சிங். இவர்க்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் ரன்பீர் மகன் குல்ஷன் ஷெராவத், தனது தங்கையுடன் செல்போனுக்காக சண்டையிட்டுள்ளார்.
 
இதில் ஆத்திரமடைந்த குல்ஷன், செல்போனை பிடிங்கி தூக்கிபோட்டு உடைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இரவு முழுவதும் குல்ஷன் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை வீட்டிற்கு வந்த குல்ஷன், துப்பாக்கியால் தன் தலையில் சுட்டுக்கொண்டு தன் உயிரை விட்டான்.
 
ஒரு செல்போன் பிரச்ச்சனைக்காக உயிரை விட்ட இந்த பையனை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இவனின் இந்த அவசர புத்தியால்,  அவனது பெற்றோர் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.