1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 அக்டோபர் 2018 (12:08 IST)

தொடர்ந்து செல்போன் பேசினால் மூளைப்புற்றுநோய்: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்

தொடர்ந்து அதிகநேரம் செல்போனில் பேசுபவர்களுக்கு மூளைப் புற்றுநோய் வர அதிக வாய்ப்பு இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது கை, கால் போன்று நம் உடலின் உறுப்பைப் போல மாறிவிட்டது. காலையில் எழுந்ததும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் செக் பண்ணுவதில் இருந்து இரவு உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்வது வரை அனைத்திற்கும் செல்போனின் உதவி நமக்குத் தேவை படுகிறது. சார்ஜ் ஏறும் நேரம் தவிரவும் தூங்கும் நேரம் தவிரவும் மற்ற எல்லா நேரங்களிலும் நம் உடலோடு ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பில் இருக்கிறது செல்போன்.

செல்போன்களில் இருந்து தொடர்ந்து வெளியேறும் கதிர்வீச்சால் மனித உடல் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கப்படுவதாகவும் அதனால் மனிதர்களுக்குப் பல உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் பல காலமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலாக ஒரு நாளைக்கு அரைமணி நேரத்திற்கு மேல் செல்போன் பேசுபவர்களுக்கு மூளைப் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கதிர்வீச்சு பேராசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் தூங்கும் போதும் செல்போனை உடலுக்கு அருகில் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.