சக மல்யுத்த வீரரை கொன்ற சுஷில் குமார்??; டெல்லியில் கைது செய்த போலீஸ்!
தனது சக மல்யுத்த வீரரை கொன்ற வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது செய்யப்பட்டார்.
பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மற்றுமொரு மல்யுத்த வீரரான சாகர் தன்கட்டுக்கும் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சாகர் தன்கட், சுஷில் குமார் கோஷ்டி இடையே டெல்லியில் தகராறு எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் சாகரை மோசமாக தாக்கிவிட்டு சுஷில்குமார் கோஷ்டி தப்பியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சாகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீஸார் சுஷில் குமாரை தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாகி இருந்த சுஷில் குமாரை இன்று டெல்லியில் போலீஸார் கைது செய்துள்ளனர்.