திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:30 IST)

கணவரை பிரிந்த பெண்ணுக்கு இப்படி ஒரு தண்டனையா? இணையத்தில் வைரலான வீடியோ!

மத்திய பிரதேச மாநிலத்தில் கணவரைப் பிரிந்த பெண்ணுக்கு கொடூரமான தண்டனை ஒன்றை அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்துள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிவது இப்போது சாதாரண ஒரு நிகழ்வாக உள்ளது. ஆனாலும் இன்னமும் சில பகுதிகளில் கணவன் எவ்வளவு கொடூரமானவனாக இருந்தாலும் அவருடனேயே சேர்ந்து வாழவேண்டும் என்று பெண்கள் கட்டாயப்படுத்தப்படுவதும் நடந்துகொண்டுதான் உள்ளது.

அப்படி மகாராஷ்டிராவில் தனது கணவனைப் பிரிந்த பெண்ணுக்கு தண்டனை அளிக்கும் விதமாக கணவரின் வீட்டைச் சேர்ந்த ஒருவரை அந்த பெண் 3 கி மீ தூரம் தூக்கிச் செல்ல வேண்டும் என்று கொடுரமான தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களிலும் பரப்பியுள்ளனர்.