புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (07:09 IST)

100 நாட்களில் தீர்வு: ஸ்டாலினிடம் திமுக பிரமுகர் மீதே புகார் அளித்த பெண்!

ஸ்டாலினிடம் திமுக பிரமுகர் மீதே புகார் அளித்த பெண்!
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் நூறு நாட்களில் தீர்வு காணப்படும் என்றும் பொதுமக்கள் திமுகவை நம்பி மனு அளிக்கலாம் என்றும் கூறிவருகிறார் 
 
இந்த நிலையில் வேளாங்கண்ணி சேர்ந்த பெண் ஒருவர் திமுக பிரமுகர் ஒருவர் மீது புகார் அளித்து தனக்கு நீதி வேண்டும் என ஸ்டாலினிடம் மனு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று வேளாங்கண்ணிக்கு பிரசாரத்துக்கு வந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் இடம் அந்த பகுதியை சேர்ந்த வசந்தி என்பவர் கொடுத்த மனுவில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை திமுக பிரமுகர் ஒருவர் அபகரித்து விட்டார் என்றும் பொய்யான ஆவணங்கள் மூலம் அவர் அபகரித்த அந்த நிலத்தை தனக்கு மீண்டும் திருப்பி தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மனு கொடுத்துள்ளார் 
 
ஆனால் அவரது மனு ஸ்டாலின் முன்னிலையில் வாசிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வசந்த் கூறியபோது ’அரசியல் செல்வாக்கு காரணமாக எங்களுடைய நிலத்தை அபகரித்து விட்ட திமுக பிரமுகர் தாமஸ் ஆல்வா என்பவர் மீது புகார் அளித்தோம். ஆனால் எங்கள் குறைகளை கேட்பதற்கு மைக்கில் அழைக்கவில்லை அதனால் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டோம்’ என்று கூறியுள்ளார்