புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 28 ஏப்ரல் 2018 (12:11 IST)

ஜனநாயக கடமையை செய்ய தவறிவிட்டேன்: மல்லையா...

கிங்பிஷர் நிறுவன தலைவர் விஜய் மல்லையா பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி லண்டன் தப்பி சென்றுள்ளார். தற்போது அவர் ஜனநாயக கடமையை செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளார். 
 
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி, அதை செலுத்தாமல் ஏமாற்றியதாக, அதன் தலைவர் விஜய் மல்லையா மீது பல வங்கிகள் வழக்கு தொடர்ந்தன. 
 
அதையடுத்து, அவர் 2016 மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்றார். தற்போது அவரை நாடு கடத்தி வருவது தொடர்பாக இந்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 
இந்த வழக்கின் விசாரணையில், விஜய் மல்லையா இன்று ஆஜரானார். அப்போது கர்நாடகா சட்டசபை தேர்தல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, நான் கர்நாடகாவை சேர்ந்தவன். கர்நாடகா சார்பில் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளேன். 
 
தேர்தலில் ஓட்டுப் போடுவது என்பது ஒருவருடைய ஜனநாயக கடமை. ஆனால், அந்த கடமையை செய்ய முடியாத வகையில், என்னுடைய பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துள்ளனர். இதனால் என்னால் ஓட்டுப் போட முடியாது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.