1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (14:32 IST)

வாஜ்பாய் இறுதி ஊர்வலம் துவங்கியது!

நேற்று மாலை 5.05 மணிக்கு உடல்நலக்குறைவால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார். இன்று பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டது. 
முதலில் வாஜ்பாய் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின்னர் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது பாஜக அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் இறுதி ஊர்வலம் துவங்கியது. 

வாஜ்பாய் உடல், அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில், பாஜக அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக யமுனை நதி தீரத்தில் அமைந்துள்ள, ராஜ்காட் விஜய்காட் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. 
 
மாலை 4 மணியளவில், விஜய்காட் ராஜ்காட் பகுதியில் உள்ள ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலம் பகுதியில் வாஜ்பாய்க்கு இறுதி சடங்குகள் நடைபெறும். இதன்பிறகு, வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படும். இவரது இறுதிசடங்கில் வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.