வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (19:21 IST)

பொக்ரான் நாயகன் வாஜ்பாய்: 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சி தடை முறியடிப்பு!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று உடல்நல குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வாஜ்பாய் 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சி தடையை முறியடித்த நிகழ்வு இவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 
இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத வல்லமையில் அச்சுறுத்தி கொண்டிருந்த நிலையில், இந்தியா அணு ஆயுத சோதனை நடத்த துணிந்து முடிவெடுத்தார் வாஜ்பாய். 
 
அதன்படி, அமெரிக்காவிடம் நெருக்கடியை சந்தித்து வந்த இந்தியா, வாஜ்பாய் மற்றும் அப்துல் கலாம் கூட்டு முயற்சியால் 1998 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி அதே பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. 
 
சுமார் 45 கிலோ டன் ஹைட்ரஜன் குண்டை இந்தியா பரிசோதனை செய்தது. அப்போது பாலைவன பகுதிகள் அதிர்ந்தன. இதனை பல நாடுகளும் நில நடுக்கம் என்று கருதின. வாஜ்பாய் உலக நாடுகளுக்கு இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியது என தெரிவித்த பின்னர்தான் இந்த செய்தி வெளியே தெரிந்தது.
 
இதன் மூலம் இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சி தடையை வாஜ்பாய் முறியடித்தார்.