புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (10:49 IST)

புயல், கொரோனாவை கடந்து சேர்ந்த ஆன்லைன் காதலர்கள்! – பேஸ்புக் காதலின் கதை!

Love
உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞரும், இந்தோனேஷிய பெண்ணும் பல்வேறு இயற்கை சீற்றங்களை தாண்டி ஒன்றிணைந்த சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் ருத்ராபூரில் உள்ள நாராயண்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சன்வார். பேஸ்புக்கில் இருந்த இவர் கடந்த 2015ம் ஆண்டில் ஸ்போக்கன் இங்கிலீஷ் க்ரூப் ஒன்றில் இணைந்து இங்கிலீஷ் கற்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது இவருக்கும் இந்தோனேஷியாவை சேர்ந்த மிப்தாகுல் என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரு சமயம் இந்தியாவில் பெரும் புயல் வீசியபோது சன்வாரை அடிக்கடி நலம் விசாரித்து வந்துள்ளார் மிப்தாகுல். அதுபோல இந்தோனேஷியாவில் மழை, வெள்ளம் என்றாலும் கூட அக்கறையுடன் விசாரித்து வந்துள்ளார் சன்வார். இதனால் இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது.


இருவருமே தங்கள் காதலை தெரிவித்துக் கொண்ட நிலையில் வீட்டில் சொல்லி சம்மதமும் பெற்றுள்ளனர். பின்னர் 2019ல் இந்தோனேஷியா சென்ற சன்வார், மிப்தாகுலை திருமண நிச்சயம் செய்து கொண்டுள்ளார். ஆனால் அதற்கு பிறகு கொரோனா முழுமுடக்கம் வந்ததால் இருவரும் திருமணம் செய்து கொள்ள இயலாமல் போனது.

தாமதமானாலும் தொடர்ந்து பேசி வந்த இருவரும் தற்போது வெற்றிகரமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இயற்கை இடையூறுகளை தாண்டி சேர்ந்த அவர்களது காதலுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Edit By Prasanth.K