செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (07:58 IST)

இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்! டெல்லியில் பலத்த பாதுகாப்பு..!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இன்று இந்தியா வருகை தர இருப்பதை அடுத்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
டெல்லியில் நடைபெறும் டி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகிறார். மேலும் அவர் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்திக்க இருப்பதாகவும் இருநாட்டு உறவு, பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும்  ஒரு சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வர இருப்பதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னரே அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வந்ததாகவும் கூறப்பட்டது
 
Edited by Siva