ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (07:22 IST)

2011 ல நடந்ததுக்கு பழிவாங்க ரெடியா இருக்கோம்… பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் கருத்து!

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. உலகக் கோப்பை தொடர் இன்னும் ஒரு மாத காலத்தில் இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில் இந்த முறை இந்தியாவில் உள்ள மைதானங்களில் மட்டுமே நடக்க உள்ளதால் இந்திய அணிக்குக் கூடுதல் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

அரையிறுதிக்கு செல்ல தகுதியுள்ள அணிகளாக இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளை நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்க உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடர்குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் “2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. இந்த முறை அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் வென்று பாகிஸ்தான் கோப்பையை வெல்லும். அந்தக் காட்சியை பாகிஸ்தானிகள் இப்போதே மனதினுள் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.