1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (13:52 IST)

கடன் தொல்லை.. தற்கொலைக்கு முன் செல்பி எடுத்த இளம் தம்பதி.. அதிர்ச்சி சம்பவம்..!

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம் ஜோடி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலைக்கு முன் அவர்கள் எடுத்த செல்பி புகைப்படம் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர்கள் செல்பி எடுத்து தங்கள் கடை ஊழியர்களுக்கு அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹ்ரான்பூர் என்ற பகுதியில் நகை கடை வைத்திருக்கும் சௌரவ் என்பவர் தனது தொழிலில் கடன் அதிகமாகி விட்டதை அடுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
 
இதனை அடுத்து அவரும் அவரது மனைவியும் கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். மேலும் தங்களது இரண்டு குழந்தைகளையும் பாட்டி பார்த்துக் கொள்வார் என்று தற்கொலை செய்வதற்கு முன் செல்பி எடுத்து வாட்ஸ் அப்பில் இருவரும் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளனர்.
 
கடந்த சனிக்கிழமை காலையிலிருந்து இருவரையும் காணவில்லை என அவரது குடும்பத்தினர் புகார் அளித்த நிலையில் தற்போது இந்த செல்பி புகைப்படம் வந்து இருப்பதையடுத்து காவல்துறையினர் ஆற்றில் உடலை தேடிய நிலையில் சௌரவ் உடல் மட்டும் கிடைத்துள்ளதாகவும் அவரது மனைவியின் உடல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran