ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (09:45 IST)

கடன் தொல்லை: உயர் சக்தி மின்கம்பியை பிடித்து கணவன் - மனைவி தற்கொலை..!

வேதாரண்யம் அருகே  கணவன் மனைவி கடன் தொல்லை காரணமாக மொட்டை மாடியில் உயர் சக்தி மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேதாரண்யம் பகுதியை சேர்ந்த குமரேசன் - புவனேஸ்வரி தம்பதியினருக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததாகவும் கடன்காரர்கள் பணத்தை கேட்டு நெருக்குவதாகவும் கூறப்பட்டது.

மேலும் திருமணமாகி இரண்டே ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தைகள் இல்லை என்ற மனக்கவலையும் இந்த தம்பதிக்கு இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் குழந்தை இல்லை மற்றும் கடன் தொல்லை காரணமாக இந்த தம்பதிகள் மனம் வெறுத்து மொட்டை மாடி அருகே செல்லும் உயர் சக்தி மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது..

இருவரது சடலமும் கைப்பற்றப்பட்டு பிரேத சோதனைக்காக அனுப்பி உள்ளதாகவும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக தம்பதியினர் கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva