உருமாறிய கொரோனா- இந்திய சுற்றுப்பயணத்தை தவிர்த்த போரிஸ் ஜான்சன் !!
நாட்டின் குடியரசு தினத்தன்று வருகை தரவிருந்த போரிஸ் ஜான்சன் இந்திய சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார்.
நாட்டின் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நிகழ்ச்சிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டு தலைவர்கள் வந்து விருந்தினராக கலந்து கொண்டு வந்தனர். கடந்த மார்ச்சில் அதிபர் ட்ரம்ப் வந்து சென்ற பிறகு கொரோனா தாக்கம் காரணமாக உலக தலைவர்கள் யாரும் இந்தியா வரவில்லை.
இந்நிலையில் பிரதமர் மோடி இந்திய குடியரசு தினத்தில் விருந்தினராக கலந்து கொள்ள போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருவதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
ஆனால், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உருமாறிய கொரோனா பரவலால், இந்திய சுற்றுப்பயணத்தை தள்ளிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.