இந்தியாவுக்கு அத்தியாவசிய மருத்துவ உதவி செய்யும் அமெரிக்கா – ட்ரம்ப் அறிவிப்பு!
இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உபகரணமான வெண்ட்டிலேட்டரை அமெரிக்கா வழங்க இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகளவில் அமெரிக்காதான் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவுக்கு தேவையான ஹைட்ராக்ஸ்குளோரோகுயின் என்ற மருந்தை இந்தியா அனுப்பி வைத்து உதவி செய்தது.
இப்போது இந்தியாவுக்கு தேவையான வெண்ட்டிலேட்டர்களை அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது. ட்ரம்ப்பின் டிவிட்டர் பக்கத்தில் ‘நமது நண்பர்களான இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை அமெரிக்கா வழங்க இருப்பதை என்பதை பெருமையோடு அறிவிக்கிறேன்.. இந்த பேரிடர்க் காலத்தில் நாங்கள் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் பக்கபலமாக இருப்போம். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதிலும் நாங்கள் கூட்டாக பணிபுரிகிறோம். இரு நாடுகளும் இணைந்து கண்ணுக்கு தெரியாத எதிரியை வெல்வோம்' எனத் தெரிவித்துள்ளார்.