செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 மே 2020 (08:04 IST)

கொரோனா பாதிப்பு… ரகசிய வீட்டுக்கு சென்ற சன்னி லியோன்!

கொரோனா பாதிப்பு அதிகமானதை அடுத்து இந்தியாவில் வசித்து வந்த சன்னி லியோன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டதாக தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாலியல் படங்களில் நடிப்பதை விட்டு விலகியுள்ள சன்னி லியோன் இந்தியாவில் செட்டில் ஆனார். இதையடுத்து அவர் பாலிவுட் படங்களில் கிளாமர் குயினாக படங்களில் குத்தாட்டம் போட்டு வந்தார். இதையடுத்து தமிழ் மற்றும் மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். இப்போது வீரமாதேவி என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இந்தியாவில் பெரிய அளவில் வாய்ப்புகளும் ரசிகர்களும் உள்ளதால் அவர் மும்பையிலேயே தங்கி சினிமா பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் சன்னி லியோன் தான் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வாழ்க்கையில் நமக்கு குழந்தைகள் இருக்கும்போது சொந்த நல்வாழ்வும் முன்னுரிமைகளும் பின்னே சென்றுவிடும். நானும் கணவரும் குழந்தைகளை கண்ணுக்குத் தெரியாத கொலைகார கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று உணர்ந்தோம். எனவே எங்கள் வீட்டிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் பண்ணை வீட்டுக்குத் தற்போது வந்திருக்கிறோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.