புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (15:14 IST)

டெல்லியில் இறைச்சி விற்பனைக்கு தடை: திரிணாமல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

Goat Meat
நவராத்திரி திருவிழாவின் போது டெல்லியில் இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்படுவதாக டெல்லி தெற்கு மாநகராட்சி அறிவித்துள்ளது
 
 நவராத்திரி ஏப்ரல் 2 முதல் 11 வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இருக்கும் நிலையில் தெற்கு டெல்லி மாநகராட்சி இந்த நாட்களில் இறைச்சி விற்க தடை விதித்துள்ளது 
 
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நான் விரும்பும் போது இறைச்சி சாப்பிட அரசியலமைப்பு அனுமதிக்கிறது, அரசியலமைப்பு சட்டம் கடைக்காரர் இறைச்சி விற்பனையையும் அனுமதிக்கிறது. 
 
அரசியலமைப்பு சட்டம் எனக்கு இறைச்சி உண்ணவும் கடைக்காரர் இறைச்சி விற்கவும் அனுமதுள்ள் நிலையில் எப்படி இப்படி ஒரு முடிவை மாநகராட்சி எடுக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்